Thu. Mar 28th, 2024

சினிமா மற்றும் விளம்பரங்கள் மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையை அதிகரிக்கச் செய்கின்றன

சினிமா மற்றும் விளம்பரங்கள் மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையை அதிகரிப்பதால் பிரதேச, சமூக மட்ட உத்தியோகத்தர்கள் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தடுப்பு  நிறுவனத்தின் ஏற்பாட்டில் மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் தடுப்பு தொடர்பில் யாழ்.மாவட்டத்தின் பங்களிப்பு தொடர்பான மாநாடு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (25.11.2021) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மதுசாரம்,புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனை போன்ற பிரச்சினைகள்,  சவால்களை தீர்ப்பதற்கான ஆலோசனைகளும் இடம்பெற்றன. அத்துடன் ADIC நிறுவனத்தினால் புதிய கற்கை நெறிக்கான அங்குரார்ப்பண நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும் மதுசாரம்,புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனை  போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுவித்து யாழ்.மாவட்டத்தை வெற்றிகரமாக நடத்திச் சென்றமைக்காக அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
மேலும், அரசாங்க அதிபர் உரையாற்றும் போது “மதுசாரம், புகையிலை மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனை  போன்ற பிரச்சினைகளால் பாரிய  சவால்களை எதிர்கொள்வதாகவும், சினிமா மற்றும் விளம்பரங்கள் இதனை அதிகரிக்கச்செய்கின்றதெனவும் இதனைத்  தீர்ப்பதற்கு பிரதேச,  சமூக மட்ட உத்தியோகத்தர்கள் விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்” எனவும் தெரிவித்தார்.
இம் மாநாட்டில் மேலதிக அரசாங்க அதிபர், நிகழ்நிலை ஊடாக நிறைவேற்றுப் பணிப்பாளர் (ADIC) கலந்து கொண்டதோடு,  மனிதவலு நிதிமுகாமைத்துவ பணிப்பாளர்(ADIC), உளநல மருத்துவ நிபுணர், வடக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் (ADIC), சிரேஷ்ட நிகழ்ச்சி அலுவலர்(ADIC) மற்றும் உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்