வடமாகாண சிங்கள மொழி போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி எஸ்.ஜதுசிகா தேசிய மட்ட போட்டிக்கு தகுதி
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான சிங்கள மொழி போட்டியில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி மாணவி எஸ்.ஜதுசிகா முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட சிங்கள மொழி போட்டிகள் இன்று பளை மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இதில் தரம் 6 மாணவர்களுக்கான சிங்கள பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.