சிகரெட்டால் வந்த வினை, உயிரைவிட்ட குடும்பஸ்த்தா்.

குருநாகல் பகுதியில் சிகரட் கொடுக்க மறுத்தவரை 600 மீற்றா் துாரம் துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்த நபா் கைது செய்யப்பட்டிருக்கின்றாா்.
மது விருந்தின் போது சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த நபரிடம் சிகரெட்டை தருமாறு மற்றுமொருவர் கேட்டுள்ளார்.
எனினும் அதனை வழங்காமையினால் கோபமடைந்த நபர் கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். குறித்த நபர் சுமார் 600 மீற்றர் தூரம் துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்துள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் பொல்கஹவெல, திவுல்கும்புர கிராமத்தை சேர்ந்த 48 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
சிகரெட்டிற்காக ஆரம்பத்தில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியமையினால் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.