சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி வங்கி உத்தியோகத்தர் பலியாகியுள்ளார்

சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி வங்கி உத்தியோகத்தர் பலியாகியுள்ளார்.
தனியார் வங்கியில் இன்று மதியம் மின்சார மோட்டார் பழுதடைந்துள்ளது. அதன் திருத்த பணிகள் நடந்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் வங்கி உத்தியோகத்தர் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்
சம்பவத்தில் நுணாவில் பகுதியைச் சேர்ந்த நித்தியானத்தன் கஜலக்சன் வயது 26என்ற உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்