சாவகச்சேரி சரசாலைப் பகுதியில் உள்ள வயல் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு
சாவகச்சேரி சரசாலைப் பகுதியில் உள்ள வயல் கிணற்றிலிருந்து நேற்று காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
நேற்றுக் காலை வேலைக்கு சென்ற குறித்த நபர் இரவு வரை வீடு திரும்பாததை அடுத்தே மேற்கொண்ட தேடுதல்களை அடுத்தே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த 55 வயதுடைய வல்லிபுரம் திருச்செல்வம் என்று தெரியவருகிறது