Mon. Feb 10th, 2025

சாதனைகள் படைக்கும் தமிழன் இளங்குமரனை பாராட்டுவோம்

தமிழர்நாம் சாதனைகள் படைக்கும் தமிழர்களை பாராட்டுவோம்
Malta நாட்டில் 33 நாடுகள் பங்குபற்றிய (5 நாட்கள்)  உலக கராத்தே சம்பியன் போட்டியில் இளங்குமரன் மார்க்கண்டு (இளங்கோ/மார்க் ) முக்கிய நடுவராக பணியாற்றியுள்ளார். இச்சுற்றுப் போட்டி 5நாட்களாக நடைபெற்றது.
இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது
தான் ஒரேயொரு உலகத் தமிழனாக WUMF எனும் உலக சம்மேளனத்தை நிறுவி 1000 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றிய கராத்தே உலக கிண்ணத்தை இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடாத்தியதாகவும் இந்தவருடம் கடந்தாண்டைவிட மிகச்சிறப்பாக 20-23 புரட்டாதி (September) குறோளி எனுமிடத்தில் K2 அரங்கத்தில் மீண்டும் செய்யவிருப்பதாக தெரிவித்தார்.
தமிழன் சாதிப்பதை பலதமிழர்கள் கைதட்டிபாராட்டுவதில்லையென தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
நாம் தமிழராய் அவரை பாராட்டுகிறோம் அவரின் அடுத்தடுத்த சாதனைகளை எமது இணையத்தளத்தில் வெளிப்படுத்த தயாராகவுள்ளோம்
நீங்களும் இதை மற்றவர்களுக்கு பகிர்வதின் மூலம் சாதனையாளர்களை ஊக்கிவிப்போம்
தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்ப்போம்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்