சஹ்ரானின் மனைவி இரகசிய வாக்குமூலம்
தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பல மக்களின் உயிரைக் காவு கொண்ட குண்டு தாக்குதலுக்கு தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவர் கடந்த 15ம் திகதி கொழும்பு கோட்டை நீதிவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
தற்கொலை குண்டு தாக்குதலில் பலியான சஹ்ரான் ஹசிம் மற்றும் மொகமட் இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் ஆகியோரின் மரண விசாரணையில் வைத்தே இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.