சவேந்திர சில்வா நியமனம் தமிழர்களுக்கு அவமானம்!! -கொதிக்கும் கூட்டமைப்பு-
நாட்டின் புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமித்தமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கூட்டமைப்பினர் இந்த எதிர்ப்பினை தமது கட்சியின் உத்தியோக பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், கடுமையான யுத்த குற்றங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை இராணுவத் தளபதியாக நியமித்தமை தமிழ் மக்களுக்கு செய்த அவமானம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.