சவூதி தாக்குதல் எதிரொலி , அரைமடங்கான சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தி..உச்சத்தை தொட இருக்கும் எண்ணெய் விலை
சவூதி எண்ணெய் உற்பத்தி நிலைகள் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தியது ஈரான் தான் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.
அரசுக்கு சொந்தமான நிறுவனமான அரம்கோ நடத்தும் எண்ணெய் உற்பத்தி நிலையங்களை தாங்கள் தாக்கியதாக யேமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கூறியதை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார்
யேமன் பகுதிகளில் இருந்து தாக்குதல் நடந்த இடமானது பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ளதால் , கிளர்ச்சியாளர்களால் இதனை செய்யமுடியாது என்று மறுக்கும் ஆய்வாளர்கள், இதனை ஈரானில் இருந்தோ அல்லது இராக்கின் ஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று ஊக்கம் வெளியிட்டுள்ளார்கள்.
ஏற்கனவே ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் மத்தியகிழக்கில் பதற்றம் அதிகரித்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்று இருப்பது இதை மேலும் சிக்கலாக்கவுள்ளது. இதனிடையே சவுதி அரசர் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை எதிர்கொள்ள சவுதி தயாராகவுள்ளதாவும் சவுதி அரசர், அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் சவுதி அரேபியா யேமன் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டு வருவதுடன், ஈரான் யேமன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வருவதுமே இந்த தாக்குதல்களின் பின்னணியில் உள்ள காரணமாகும்.
இந்த தாக்குதல் மூலம் 11 மில்லியன் பரல் ஆக இருந்த சவுதி அரேபியா என்னை உற்பத்தி நாளொன்றுக்கு 5.7 மில்லியனாக குறைந்துள்ளது இதனால் எரிபொருள் விலையில் பாரிய மற்றம் எதிர்வரும் நாட்களில் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகிறார்கள்..
இலங்கையின் எண்ணெய் விலை மாற்றம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஏற்படுவதால், இதன் பாதிப்பு இப்போதைக்கு இலங்கையில் ஏற்படாது என்ற போதிலும், அடுத்த மாதம் இதன் தாக்கம் உணரப்படலாம்.