சற்று முன்னர் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி வீதியில் விபத்து

சற்று முன்னர் வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி வீதியில் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி வீதியூடாக வதிரி நோக்கி வந்த முச்சக்கர வண்டிக்கு முன்பாக சென்ற மோட்டார் சையிக்கிள் திடீரென வீதியின் குறுக்காக உள்ள குறுக்கு வீதியில் திரும்ப முற்பட்ட போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி மதிலுடன் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.