சற்று முன்னர் நெல்லியடி பொலீஸாரின் அதிரடி நடவடிக்கை
சற்று முன்னர் நெல்லியடி பொலீஸாரின் அதிரடி நடவடிக்கை இன்று(11) நெல்லியடி வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையால் பிரதான வீதியில் வாகனத்தை நிறுத்தும் ஒழுங்கு பல மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நடைமுறைகள் சாரதிகளினால் பின்பற்றப்படவில்லை. ஆனால் இன்று நெல்லியடி பொலீஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வாகனங்களை உரிய இடத்தில் நிற்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டதோடு வர்த்தக உரிமையாளர்களுக்கும் நடைமுறைப்படுத்துவதற்குரிய ஒழுங்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பருத்தித்துறை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இடது புறமாகவும், செவ்வாய், வியாழன், சனி கிழமைகளில் வலது புறமாகவும் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 