Mon. Oct 7th, 2024

சர்வதேச விண்வெளி ஹோட்டல் ஒரு இரவுக்கு 35000 டாலர், நாசா ரெடி , நீங்க ரெடியா?

சர்வதேச  விண்வெளி நிலையத்திற்கு பயணிகளை அனுமதிப்பதன் மூலம் நாள் ஒன்றுக்கு பயணி ஒருவருக்கு 35,000 டாலர் அறவிடுவதற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா தீர்மானித்துள்ளது. 2020 ஆம் ஆண்டளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சுற்றுலா மற்றும் பிற வியாபார முயற்சிகளுக்கும் அனுமதிக்க நாசா முடிவெடுத்துள்ளது.

தனியார் விண்வெளி பயணிகள்  30 நாட்கள் வரையில் அனுமதிக்க படுவார்கள் என்றும் , ஆண்டொன்றுக்கு ஒன்று முதல் இரண்டு வரையான பிரயாணகளாக மட்டுபடுத்துவதற்க்கும் நாசா தீர்மானித்துள்ளதாக சர்வதேச விண்வெளி நிலையத்தின் துணை இயக்குனர் ராபின் கூறினார்.

 

விண்வெளிப்பயணிகளின் மருத்துவ பயிற்ச்சிகளையும், பயணிகளை தீர்மானிக்கும் மற்றும்  அவர்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் பொறுப்பையும் தனியார் விண்வெளி நிறுவனகளே மேற்கொள்ளும் என்றும் நாசா அறிவித்துள்ளது.

 

இந்த திடடதுக்காக நாசா ஸ்பேஸ் எஸ்( SpaceX ) மற்றும் போயிங்(Boeing) நிறுவனங்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.நாசாவின் விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்புவதற்கு இந்த நிறுவனக்கல் நபர் ஒருவருக்கு 60 மில்லியன் டாலர்களை அறவிடுகிறார்கள். சுற்றுலா பயணிகளுக்கும் இது போன்ற கட்டணமே அறவிடப்படும் என்றும் எதிர்பார்க்க படுகின்றது. இது இலங்கை பணத்தில் 1000 கோடி ரூபாவை தாண்டும். இதற்கு முன்னர் இதுபோன்ற வியாபார நோக்கங்களுக்கான பயன்பாட்டினை நாசா தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாசா இந்த விண்வெளி நிலையத்தை ரஷ்யாவின் கூட்டு முயர்ச்சியில்  1998 ஆம் ஆண்டில் கட்டி முடித்தது.

2001 ஆம் ஆண்டில், அமெரிக்க தொழிலதிபர் டென்னிஸ் விண்வெளி நிலையத்துக்கு சென்று வருவதற்கு 20 மில்லியன் டாலர்களை ரஷ்யாவுக்கு வழங்கி இருந்தார். விண்வெளிக்கு பயணிகளை அனுப்பும் முயர்ச்சியில் நிறைய நிறுவனங்கள் போட்டியில் இறங்கி உள்ளதால் எதிர்காலத்தில் இந்த கடடணத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாம்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்