Sun. Sep 8th, 2024

சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பின்(IOM ) தலைவர் சரத் தாஸ் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்தார்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பின்(IOM ) தலைவர் சரத் தாஸ் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் தொடர்பாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கு அழைத்து வருவது தொடர்பாகவே இந்த பேச்சுவார்த்தை அமைந்தது.

IOM இவர்களை அழைத்து வருவதற்கு 6.5 மில்லியன் ரூபாய்களை செலவிட தயாராக உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.  இந்த முயற்சிகள் கடந்த காலங்களிலும் செயற்படுத்த பட்டபோதிலும்,  பெரிதும் வெற்றியளிக்கவில்லை. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நிறைய தாமதங்கள் ஏற்பட்டதாகவும்,  இதனால் தான் ஆளுநரின் உதவி இந்த சந்திப்பின் போது கோரப்பட்ட்தாகவும் அறியப்படுகிறது.

இதன் போது பதிலளித்த ஆளுநர்,  தான் இது சம்பந்தமாக வெளிவிவகார அமைச்சு மற்றும் அதிகாரிகளுடன் பேசி தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்