சர்சைக்கு மத்தியில் வெளிவரும் “மெரீனா புரட்சி ” திரைப்படம்
சர்சைக்கு மத்தியில் வெளிவரும் “மெரீனா புரட்சி ” திரைப்படம்
ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்தியாவில் தடைசெய்யப்பட்டதற்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் போராட்டம் நடாத்தினர்.
இதனை மையமாக வைத்து எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் உருவாகிய படம் தான் “மெரீனா புரட்சி “
இத்திரைப்படம் 2017ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2018ம் ஆண்டு திரைக்கு வரவிருந்த வேளை அதற்கு திரைப்பட தணிக்கை குழு இதில் சர்ச்சை நிறைந்த காட்சிகள் இருப்பதனால் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தை நாடிய இயக்குநர் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் திரையிடப்பட்ட ஆதாரத்தை காட்டி தற்போது வெளியிடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பல சர்சைகளோடு மெரீனா புரட்சி அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.