சம்மதம் தெரிவித்த ரணில், வேட்பாளராக களமிறங்க காத்திருக்கும் சஜித்

இன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமிடையிலும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதசவை களமிறக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்கு முதல் இதே உறுப்பினர்கள்அமைச்சர் சஜித் பிரேமதாசாவுடனும் சந்தித்து பேசியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இருந்த போதிலும் நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பான உத்தியோகபூர்வமான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதால் தேர்தல் களம் மீண்டும் சூடு பிடிக்கவுள்ளதுடன் , கோத்தபாய ராஜபக்சவுக்கு மிகவும் சவாலான போட்டியாளராக இருப்பார் என்று அரசியல் அவதானிகள் சூட்டிக்காட்டுகிறார்கள்