சம்மட்டி எறிதலில் பொலிகண்டிக்கு வெண்கலம்

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடரில் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த ஸ்ரீதரன் ஐங்கரன் வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடர் அண்மையில் மகிந்த ராஜபக்ச மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 16 வயதுப் பிரிவினருக்கான சம்மட்டி எறிதல் போட்டியில்
பொலிகண்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த ஸ்ரீதரன் ஐங்கரன் 27.45 மீற்ரர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.