சம்மட்டி எறிதலில் ஜெ.மேரிலக்சிகா வெள்ளி பதக்கம்
இளநிலை பிரிவினருக்கான தேசிய மட்ட சம்மட்டி எறிதலில் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தை பிரதிநிதித்துவம் செய்த ஜெ.மேரிலக்சிகா வெள்ளி பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
இளநிலை பிரிவினருக்கான57வது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான சம்மட்டி எறிதலில் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தை பிரதிநிதித்துவம் செய்த ஜெ. மேரிலக்சிகா 23.51 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.