சம்பந்தன் மற்றும் சுமந்திரனை சந்தித்த ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சர்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரனை ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்கள் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள் . இந்த சந்திப்பானது பிரதமர் ரணில் விக்ரம சிங்கவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது காணப்பட்ட இணக்கப்பாட்டின் அடுத்த கட்டமாகவே இடம்பெற்றதாக ஐக்கிய தேசிய கட்சி வடடாரங்கள் தெரிவிக்கின்றன . இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர்களான மங்கள சமரவீர,ராஜித்த சேனாரத்ன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பங்குபற்றியிருந்தனர்.
சந்திப்பின் பின்னர் கருது தெரிவித்த சுமந்திரன் ,சஜித் பிரேமதாஸவிடம் இருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திப்பதற்கான தனிப்பட்ட அழைப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.