மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றமும் வவுனியா வடக்குப்பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய சமூக வலைத்தளங்களின் பாதுகாப்பும் பாதிப்பும் தொடர்பான செயலமர்வு இன்று வ/கனகராயன் குளம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் கனகராயன்குளம் மகா வித்தியாலய பிரதி முதல்வர் திரு.சுகந்தன் அவர்களும் சிறப்பு அதிதிகளாக மாவட்ட இளைஞர் சேவைமன்ற அதிகாரி, கனகராயன் குளம் தெற்கு கிராம சேவகர்,பாடசாலை ஊடககற்கைள் மற்றும் தொழினுட்ப பிரிவு ஆசிரியர்களும் கலந்து கொண்டார்கள்.
மேற்படி செயலமர்வின் வளவாளர்களாக சட்டத்தரணி திருமதி.சிவகுமார் துஷ்யந்தி அவர்களும் தகவல் தொடர்பாடல் ஆசிரியர் திரு.சர்ராஜ் அவர்களும் கலந்துகொண்டு சிறந்த கருத்துக்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
குறித்த நிகழ்வில் இளைஞர் சேவைகள் மன்றப்போட்டிகளில் வெற்றியீட்டிய இரண்டு மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.