Sun. Apr 12th, 2026

சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்

நாளை செவ்வாய்க்கிழமை கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி வங்கி உத்தியோகஸ்த்தர்கள்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நெல்லியடி,  உடுப்பிட்டி,  துன்னாலை சமுர்த்தி வங்கி உத்தியோகஸ்த்தர்களே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று எரிபொருள் நிரப்புவதற்காக சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் வருகை தந்துள்ளனர். ஆனால் எரிபொருளுக்காக காத்திருந்த மக்களால் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கு எதிப்புத் தெரிவித்தனர். இதனால் உத்தியோகஸ்த்தர்கள் எரிபொருள் நிரப்பாமல் திரும்பிச் சென்றுள்ளனர். தாம் கடமைக்கு வருவதற்கு அப்பகுதி மக்களாலேயே எதிப்புத் தெரிவித்தது வேதனைக்குரிய விடயம். வறிய மக்களுக்கான கொடுப்பனவுகளை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலும், எரிபொருள் தட்டுப்பாட்டால் மிகுந்த சிரமத்துடன் கடமைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.  இந்நிலையை உணர்ந்து கொள்ளாமல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூடியிருந்த சிலரால் சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருளை எதிப்புத் தெரிவித்து நிறுத்தியுள்ளனர். இதனால் எரிபொருள் இன்மையால் நாளை செவ்வாய்க்கிழமை சமுர்த்தி வங்கி  உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed