Sat. Jan 18th, 2025

சமாதானத்தை வேண்டி தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் பாத யாத்திரை

நிலையான சமாதானத்திற்காக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம் எனும் நோக்கில் யாழ்ப்பாணம் முதல் கதிர்காமம் வரை பாத யாத்திரை இளைஞர்களால் மேற்கொள்ளப்பட உள்ளதாக யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ். வினோதினி தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நிலையான சமாதானத்திற்காக நல்லிணக்கத்தை கட்டியொழுப்பும் நோக்கில் 15-29 வயதிற்கு இடைப்பட்ட இலங்கை வாழ் இளைஞர் சமூகத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளை உள்ளடக்கிய கதிர்காம பாத யாத்திரை நிகழ்வுக்கான ஆரம்ப விழாவினை எதிர்வரும் 25ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து வைப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் சுமார் 200 இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்