Mon. May 18th, 2026

சபாநாயகர் கரு ஜெயசூரியா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஜினாமா?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி அமைக்கப்பட்டதும், சபாநாயகர் கரு ஜெயசூரியா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சபாநாயகர் பதவியில் விலகுவர் என்று இலங்கை பொது ஜன பெரமுனா இன்று தெரிவித்துள்ளது.

கூட்டணி அமைக்ப்பட்டவுடன் கரு ஜெயசூரிய ராஜினாமா செய்வார் என்று பாராளுமன்ற உறுப்பினர் லட்சுமன் யாபா அபேவர்தன தெரிவித்தார். இதை முடிந்தால் சபாநாயகர் ஜெயசூரியாவால் ஒப்புக் கொள்ள முடியுமா என்று நான் சவால் விடுகிறேன் என்று செய்தியாளர் மாநாட்டில் கூறினார்.

பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தனது கட்சித் தலைமை பதவியை பாதுகாக்க முயற்சிக்கிறார் என்றும், இதில் கரு ஜெயசூரியா அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் .

ஐக்கிய தேசிய கட்சியில் பிரதமர் விக்ரமசிங்கவுக்கு போட்டி கொடுக்க போதுமான தைரியம் யாருக்கும் இல்லை . கட்சி மூன்றாகப் பிளவுபடுவதை யாராலும் தடுக்க முடியாது. இதனால் தன ஜெயசூரியா ஐக்கிய தேசிய கட்சியையும் தலைமையையும் காப்பாற்றி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சிக்கிறார் என்று திரு யாப்பா குறிப்பிட்டார்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed