சந்தரிக்காவை எதிர்க்கட்சி தலைவர் ஆக்க முயற்சி
வெற்றிடமாக உள்ள தேசிய பட்டியல் MP பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நியமிக்குமாறு இலங்கை சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் அமைப்பாளர்களும் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
அவரரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பின்னர் , நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த வேண்டுகோளில் குறிப்பிடுள்ளார்கள்
இந்த வேண்டுகோளானது செப்டம்பர் 3 ம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் தலமையில் இடம்பெறும் சுதந்திர கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கபட இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன