Thu. May 21st, 2026

சட்டவிரோதமாக மரம் கடத்தி சென்ற வாகனம் விபத்து! சாரதி தப்பி ஓட்டம்.

ஓமந்தை- கள்ளிக்குளம் பகுதியிலிருந்து கள்ள மரங்களை கடத்தி சென்ற வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸாா் கூறியுள்ளனா்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் ஓமந்தை A9 வீதி கள்ளிகுளம் சந்தியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வாகனம் சட்டவிரோத மரங்களுடன் வவுனியா நோக்கிச் சென்றவேளை,

கள்ளிக்குளம் வளைவில் திரும்பமுற்பட்டபோது வீதியின் அருகில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியது. இதனையடுத்து,

வாகனத்தை செலுத்திய சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவித்த ஓமந்தை பொலிஸார், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed