சஜித் வேட்பாளர் இல்லாவிடில் எதிரணி வெற்றி உறுதி -ஹரின்

ஐக்கிய தேசிய கடசியின் சார்பில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாவிட்டால் , எதிர்க்கடசி வேட்பாளர் மிகவும் இலகுவாக வெற்றியடைவார் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
அவரது அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இதனை குறிப்பிட்டார் அவர். மேலும் குறிப்பிட்ட அவர், 52 வயது நிரம்பிய சஜித் பிரேமதாஸாவே பொருத்தமான வேட்பளராக இருப்பார். மற்றைய வேட்ப்பாளர்கள் 70 வயதுக்கு மேலிருந்து ஒரே குடும்பத்தில் இருந்து வருகின்றார். சஜித் மிகவும் இளமையான கடின உழைப்பாளி , அவர் போன்றதொரு இளைய இரத்தமே ஐக்கியதேசிய கடசிக்கு இப்போது தேவை என்றார்.
பதுளை எனது தொகுதி என்பதால் சஜித் எதிர்வரும் 12 ஆம் திகதி அங்கு வரும்பொழுது அவரை வரவேற்று பெரிய கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளேன் என்றும் அவர் குறிப்பிடடார்