சஜித் மீது பொன்சேகா கடும் தாக்கு -ஏவிவிட்டாரா ரணில்..
இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா , சஜித் பிரேமதாச மீது கடும் தாக்குதல் மேற்கொண்டார். முன்னாள் பிரதமர் ரணசிங்க பிரேமதாச விடுதலை புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதன் மூலம் இலங்கை இராணுவத்தை வலுவிழக்க செய்ததாகவும், இதனால் பெருமளவான இலங்கை படையினர் பலியாகியதாகவும் தெரிவித்தார். இதன் பொது மேலும் குறிப்பிட பொன்சேகா , கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக பொது ஜன பெரமுன தெரிவு செய்தது சரியான முடிவு என்றும், நாட்டின் பாதுகாப்பை முதன்மை படுத்தியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
சஜித்தை தாக்கிப்பேச ஐக்கிய தேசிய கட்சியில் உள்ள சஜித்துக்கு எதிரான அணியினர் பொன்சேகாவை ஏவி விட்டிருக்கலாம் என்று ஊகங்கள் எழுப்பப்படுகின்றன.
இதற்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொன்சேகா , தன்னை ஜனாதிபதி வேட்பளராக தெரிவு செய்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்