சஜித் பிறேமதாஸாவை வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு போராட்டம்.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜத் பிரேமதாஸாவை நிறுத்த வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இன்னும் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்தே இந்தப் போராட்டம் நிகழவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக தான் போட்டியிடுவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இவர் திறப்பனை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.