சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளர் ஆவதை ஆதரிக்கவில்லை-பொன்சேகா

ஐக்கிய தேசிய கட்சியின் யாப்பின் படி அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாலியகொடவில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதே இதனைத்தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், தான் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவாக பேசவில்லை என்றும், அவரை தெரிவு செய்ததன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு பொதுஜன பெரமுன முன்னுரிமை அளித்துள்ளதையே தான் பாராட்டி பேசியதாகவும் , இது போல ஐக்கிய தேசியகட்சியும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று தெரிவித்ததாகவும் கூறினார்.
கட்சியின் தலைவர் என்ற முறையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமைகளை கோடனுள்ளதாக தெரிவித்த பொன்சேகா, சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளர் ஆவதை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் கூறினார்