சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பளராக போட்டியிடுவதையே தான் விரும்புவதாக மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
ஐக்கிய தேசியக்கடைசியின் சார்பில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பளராக போட்டியிடுவதையே தான் விரும்புவதாக பொதுஜன முன்னணியின் தலைவரும் எதிர் கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பணடாரநயாக மாநாட்டு மண்டபத்தில் உரையாற்றும் பொழுதே இதனை குறிப்பிட்டார். வணக்கத்திற்குரிய பலாங்கொடை ஆனந்த மைத்திரி தேரரின் 123 ஆவது பிறந்த தினம் நேற்றைய தினம் எதிர் கட்சி தலைவரின் தலைமையில் BMICHல் கொண்டாடப்பட்டது.
இதன் பொழுது மேலும் கருத்து தெரிவித்த அவர் ,என்னை பொறுத்தவரையில் பொதுஜன பெரமுன சிறுபான்மை மக்களிடம் இருந்து தேவையான அனுமதியை பெற்றுவிட்டது , அவர்கள் பெரும்பான்மையாக எங்களுக்கு வாக்களிப்பார்கள்.
ஏற்கனவே ஐக்கியதேசிய கட்சியில் கொழுந்து வீடெரியும் தேர்தல் வேட்பாளர் போட்டியில் , மேலும் சிக்கலை உருவாக்கவே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்ததாக ஊகங்கள் எழுப்பப்டுகின்றன