சஜித் பிரேமதாசாவை சந்திக்க மறுத்த கூட்மைப்பு, கடைசி நேரத்தில் சந்திப்பில் இருந்து விலகிய சஜித்.

இன்று நடைபெறவிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையேயான சந்திப்பு கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது. இதனால் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன், ஐக்கிய முன்னணி அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் மாலிக் சமரவிக்கரம ஆகியோரை மட்டுமே சந்தித்துள்ளனர்.
கூட்டமைப்பினர் அமைச்சர் சஜித் பிரேமதாசாவை சந்திக்க மறுத்ததே இதற்கு காரணம் என்று கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்பே அமைச்சர் பிரேமதாசாவை சந்திக்க முடியும் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததாலேயே இந்த சந்திப்பு நிகழாமல் போனதாக தெரியவருகின்றது.
இருந்த போதிலும், கடந்த வாரம் அமைச்சர் சஜித் யாழ்பாணம் சென்றபோது, சுமந்திரன் உட்பட்ட சில கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வரும் தனியா சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது