Wed. Sep 18th, 2024

சஜித் சரிவரமாட்டார்!!

நாட்டின் ஜனாதிபதியாகும் தகுதியுள்ள ஒரு வேட்பாளர் கூட ஐக்கிய தேசிய கட்சியினுள் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்ணான்டோபுள்ளே சாட்டியுள்ளார்.

கட்டான பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-

ஐக்கிய தேசிய கட்சி தற்போது எவ்வித தீர்மானங்களையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளது. யார் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டாலும் 2020 க்கு ஏற்ற எந்த தலைவரும் அவர்களிடம் இல்லை.
சஜித் பிரேமதாச இன்னும் 1989 ஆம் ஆண்டு பகுதிகளின் நினைவுகளோடே வாழ்ந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்ணான்டோபுள்ளே மேலும் தெரிவித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்