சஜித் குழுவினருடன் கூட்டணிக்கட்சிகள் நேற்று இரவு சந்திப்பு
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாச குழுவினருக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் ஜாதிக ஹெல உறுமய , தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் அமைச்சர்களான மனோ கணேசன் , சம்பிக்க ரணவக்க, பழனி திகாம்பரம், ரவூப் ஹக்கீம்,, சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர,கபீர் ஹசிம், மலிக் சமரவிக்கிரம, எரான் விக்கிரமரத்ன, மற்றும் நிசாம் காரியப்பர் , ரிசாத் பதுதீன் ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்
இருந்த போதிலும் இந்த சந்திப்பில் இடம்பெற்ற முக்கிய விடயங்கள் இதுவரை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தபடவில்லை. கூடத்தில் ஒருமனதாக எடுத்த முடிவின் படியே இந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்று தெரியவருகின்றது