சஜித் ஆதரவு உறுப்பினர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு எதிர்ப்பு

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அணுகியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த திட்டத்துக்கு சஜித் பிரேமதாசாவின் ஆதரவு உறுப்பினர்கள் எதிர்ப்பதாக தெரிகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவாசத்துக்கு எழுதிய கடிதத்தில், பொதுகுழுவில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான எந்த முடிவும் எடுக்காத நிலையில் இவர்கள் எவ்வாறு ஜனாதிபதி மைத்திரி பாலாவுடன் இது சம்பந்தமாக பேசுவர்கள் என்று அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதும் அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதும் இதற்காக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியிருந்தார்