Mon. Dec 9th, 2024

சஜித்தை வேட்பாளராக நியமிக்க ரணில் இணக்கம் , அறிவிப்பு இந்தவாரம்

.எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பெரும்­பா­லான கட்­சிகளினதும் , கட்சி உறுப்பினர்களின் ஆதரவை பெற்­ற­வ­ரு­மான சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நியமிப்பதற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதற்கான இணக்கத்தை ரணில் ஏற்கனவே பிரதமர் மறைமுகமாக வழங்கியுள்ளார் என்றும் , இந்த அறிவிப்பு அநேகமாக இந்த வாரமளவில் வெளிவரும் என்றும் பிரதி அமைச்சர் நளின் பண்­டார தெரி­வித்­துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளவர்கள் தங்களின் நிலைப்பாடுகளை தெரிவிக்கும் பொழுது, இதை கட்சியில் உள்ள பிரச்சினையாகவும் பிளவாகவும் காட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன . அவ்வாறு எந்தவொரு பிளவும் கட்சிக்குள் இல்லையென்றும் அவர் கூறினார்
கட்சியின் இறுதி தீர்மானத்தை ஏற்று அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இதனிடையில், நேற்றையதினம் அமைச்சர் சஜித் கூட்டணி கட்சிகளுடன் மேற்கொண்ட சந்திப்பு சுமுகமாக இடம்பெற்றதாகவும் , தமிழ் கூட்டமைப்புடனான சந்திப்பு இன்றய தினம் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்