சஜித்துடன் செல்வ்பி எடுக்க யாழில் முண்டியடித்த கூட்டம்!!
யாழ்ப்பாணம் – முற்றவெளியில் நடைபெறும் என்ரபிரைஸ் கண்காட்சிக்கு வருகைதந்த அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் செல்வ்பி எடுப்பதற்கு அதிகளவானவர்கள் முன்டியடித்துக் கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
வடக்கிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்த அமைச்சர் சஜித் பிரேமதாச முற்றவெளியில் நடைபெறும் என்ரபிரைஸ் கண்காட்சியின் இறுதி நாள் நிழக்வுகளில் கலந்து கொண்டார்.
கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று என்பதால் அதிகளவானவர்கள் அங்கு வருகைதந்திருந்தனர். குறிப்பாக பாடசாலை, தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் அங்கு வருகைதந்திருந்தார்கள்.
அங்கு வந்த அமைச்சர் சஜித் பிரேமதாச என்ரபிரைஸ் ஊடாக வங்கி கடன்களை பெற்றவர்களுக்கான காசோலைகளை கையளித்துவிட்டு, கண்காட்சியினையும் பார்வையிட சென்றிருந்தார்.
இதன் போது கண்காட்சியில் நின்ற இளைஞர்கள், யுவதிகள் என பலதரப்பட்டவர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் அனுமதி பெற்றும் பெற்றுக் கொள்ளாமலும் செல்வ்பி எடுப்பதற்கு முண்டியடித்துக் கொண்டனர்.
இருப்பினும் அமைச்சரின் மெய்பாதுகாவலர்கள் பொது மக்களை அமைச்சரின் அருகில் நெருங்க விடாமல் அடுக்க முயட்சித்த போதும், அமைச்சர் அவர்களை தன்னருகில் வருவதற்கு அனுமதிக்குமாறு கூறி இளைஞர்கள், யுவதிகள் எடுத்துக் கொண்ட செல்வ்பிக்கு அமைச்சரும் போஸ் கொடுத்ததை அங்கு அவதானிக்கக் கூடியதாக இருந்தது.