Fri. Jan 17th, 2025

சஜித்தா? ரணிலா? இரகசிய வாக்கெடுப்பு தீர்மானிக்கும்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதில் இனிமேலும் தாமதம் ஏற்படக்கூடாது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேமதாசவும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர், அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும்.

ஜனாதிபதி வேட்பாளரை உள்ளக நடைமுறைகளின் மூலம் தெரிவு செய்வதற்கு ஐ.தே.கவுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை அவர்கள் தாமதித்துள்ளனர்.

இனிமேலும் ஏற்படும் தாமதங்கள், ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவாளர்களுக்கு அநீதியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்