Mon. Feb 10th, 2025

சங்கானை பிரதேச சபைக்குட்பட்டஉணவகங்கள் மீது சுகாதார நடவடிக்கை

சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் உணவுக்கட்டுப்பாடு அதிகாரிகளும் ஆளுநரின் செயலணிக்குழு என்பன இணைந்து உணவகங்கள் மற்றும் மருந்தகங்களில் நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 15 உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் இயங்கியதாக கண்டுபிடிக்கப்பட்டது . இவற்றில் 9 உணவகங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது .
இதன் போது 4 மருந்தகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு மருந்தகங்களில் தகுதியற்ற மருந்து விநியோகிஸ்தர்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது . அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாணத்தின் அணைத்து பகுதிகளிலும் இந்த சோதனை நடவடிக்கை தொடரவுள்ளது . சுகாதாரமற்ற உணவகங்கள் காணப்படின் மக்களை ஆளுநர் அலுவலகத்தினை 021 2211 9375 என்ற விளக்கத்துடன் தொடர்பு கொண்டு அறியதருமாறு வேண்டப்படுகிறார்கள்
கடந்த வாரம் யாழ்நகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல உணவகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்