Thu. Apr 24th, 2025

கோவிற்சந்தை மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையும் , மக்களும் இணைந்த நிதி பங்களிப்புடன் புனரமைக்கப்பட்ட கோவிற்சந்தை மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ,
சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செல்லத்துரை பிரணவநாதன், வடமாகாண உள்ளூராட்சி திணைக்கள உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி.தேவந்தினி பாபு, வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நடராஜா திருலிங்கநாதன், கரவெட்டி பிரதேச செயலாளர் திருமதி.உமாமகள் மணிவண்ணன், யாழ் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பொன்னம்பலம் சிறிவர்ணன், கரவெட்டி சுகாதார வைத்திய பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.பிருந்திகா செந்தூரன் ,
கெளரவ விருந்தினர்களாக கோவிற்சந்தை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க தலைவர் சட்டத்தரணி கந்தசாமி மகிந்தன், கோவிற்சந்தை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் ஆலோசகர் சிவராமலிங்கம் சரவணகுமரன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்