கோழி இறைச்சி அதிகம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.
சிவப்பு இறைச்சிகளை அதாவது , மாடு , ஆடு ,பன்றி போன்ற இறைச்சிகளை தவிர்த்து அதிக கோழி , வாத்து இறைச்சிகளை உண்பதன் மூலம் மார்பக புற்றுநோய் வரும் ஆபத்தை தவிர்க்கலாம் என்று அமெரிக்க விஞானிகள் தெரிவித்துள்ளார்கள். National Institute of Environmental Health Sciences என்ற ஆராச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராச்சியில் சிவப்பு இறைச்சிகள் மார்பக புற்றுநோயை ஏற்படுத்துவதாக கண்டுபிடித்துள்ளார்கள். மேலும் கோழி இறைச்சி மார்பக புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாகவும் இவர்கள் வெளியிட்ட ஆராச்சி கட்டுரையில் தெரிவித்துள்ளார்கள்.
மொத்தம் 42012 பெண்கள் இந்த ஆராச்சியில் உட்படுத்தப்பட்டதாகவும் இதில் 1536 பேர் புற்றுநோயின் தாக்கத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கும் இவர்கள் , இதில் அதிகமான சிவப்பு இறைச்சியை உண்டவர்கள் குறைந்த இறைச்சியை உண்டவர்களை விட 23% சத விகிதம் அதிகமான புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை கொண்டிருப்பதாகவும் , இதேபோல் அதிகம் கோழி இறைச்சி உண்டவர்கள் 15’% குறைவான புற்று நோய் வாய்ப்பை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.