கோலூன்றி பாய்தலில் புவிதரன் புதிய சாதனை
48வது தேசிய மட்ட தடகள போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றி பாய்தலில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் அருந்தவராசா புவிதரன் புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
அகில இலங்கை தேசிய மட்ட மாகாணங்களுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான தடகள போட்டிகள் கொழும்பு ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் அருந்தவராசா புவிதரன் 5.12 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய சாதனையை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். கடந்த ஆண்டு தென்னிலங்கை வீரரினால் 5.11 மீற்றர் சாதனையாக காணப்பட்ட உயரத்தையே இவர் இவ்வாண்டு முறியடித்துள்ளார்.