Sat. May 16th, 2026

கோலூன்றி பாய்தலில் நே.டக்சிதா தங்கம் 

கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட கோலூன்றி பாய்தலில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த நே.டக்சிதா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
கனிஸ்ட பிரிவினருக்கான 57வது  தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் இன்றும் நாளையும் நாளை மறுதினமும் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான கோலூன்றி பாய்தலில் சாவகச்சேரி  இந்துக்கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த  நே.டக்சிதா 3.20m பாய்ந்து தங்கப் பதக்கத்தையும் அதே கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த  எஸ். தரணிகா 4ம் இடத்தையும் வி. விசோபிகா 5ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed