கோலூன்றி பாய்தலில் சாவகச்சேரி பிரதேச வீராங்கனை அபிஷாளினிக்கு தங்கம்

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பி.அபிஷாளினி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்களுக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பி. அபிஷாளினி 3.10 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.டிலக்ஸனா 2.90 மீற்றர் உயரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும்,
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.நிருஷிகா 2.80 மீற்றர் உயரம் பாய்ந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.