கோப்பாய் பிரதேச செயலக விளையாட்டு விழா இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டியின் இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு புத்தூர் வீனஸ் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கோப்பாய் பிரதேச செயலாளர் சண்முகராஜா சிவசிறி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் பாலன் முகுந்தன், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் கதிர்வேல் விஜிதரன், கெளரவ விருந்தினராக முன்னாள் உதைபந்தாட்ட விளையாட்டு வீரர் வடிவேல் திருஞானசம்பந்தர் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.