கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் பரிசில் தின நிகழ்வு

கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியின் பரிசில் தின நிகழ்வு நாளை மறுதினம் வியாழக்கிழமை முற்பகல் 8.30 மணிக்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரியின் முதல்வர் எஸ்.வேலழகன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பட்டயக் கணக்காளரும், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத் தலைவருமான எம்.திருவாசகம், சிறப்பு விருந்தினராக கோப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.சிவநேசன், கோப்பாய் இலங்கை வங்கி முகாமையாளர் எம்.தவபாலன், கெளரவ விருந்தினராக கோப்பாய் மகா வித்தியாலய ஆசிரியை செல்வி. என்.காயத்திரி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.