கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

2021/22 கல்வி ஆண்டு அணியினருக்கான பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ளது.
இதில் சித்தியடைந்தோருக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வுகள் நாளை சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ரதிலஷ்மி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் எஸ்.லதீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக நிகழ்வு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கான
சான்றிதழ்களை வழங்கி வைக்கவுள்ளார்.