கோத்தயப ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றில் நிராகரிப்பு- சிக்கலாகுமா ஜனாதிபதியாகும் கனவு
நிரந்தர மேல்நீதிமன்றில் விசாரணைக்கு வரும் , மெதமுலனை டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தயப ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ,நீதிபதிகளான சிசிர டி ஆப்று, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பீ.தெஹிதெனிய அகியோர்களால் பெரும்பான்மையுடன் குறித்த மனு நிகாகரிக்கப்பட்டுள்ளது.நிரந்தர மேல்நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் குறித்த வழக்கில், குற்றச்சாட்டுக்கள் சேகரிக்கப்படுகின்றமைக்கு ஆட்சேபனை தெரிவித்து ராஜபக்ஷவினால், உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது .
, இன்று குறித்த மனுவானது , விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியை வழங்கும் அளவுக்கு நியாயமான சட்டரீதியான அடிப்படை இல்லை என உயர்நீதிமன்றத் தவிசாளரான நீதியரசர் சிசிர டி ஆப்று, தெரிவித்து அதனை நிராகரித்தார் .
மெதமுலனை – டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்காக 33.9 மில்லியன் ரூபாவை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை, ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தாம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நிரந்தர மேல்நீதிமன்றம் அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.