கோத்தபாய நாட்டை ஆளுவதற்கு பொருத்தமானவர் அல்ல-பொன்சேகா .
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெல்லவேண்டுமாயின் நாட்டை முன்னிறுத்தி ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவேண்டும். கம்பஹாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்பொழுது இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு தலைவர் இருக்கிறார், கொள்கை இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி அவர்கள் தங்களின் வேட்பாளரை தெரிவு செய்வார்கள். கோத்தபாய ராஜபக்சவினால் இந்த நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சி ஒரு கையாலாகாத வேட்பாளரை தெரிவு செய்யுமாயின் , கோத்தபாய இலகுவாக வெற்றிபெறுவார் . இது பொது மக்களின் கைகளிலேயே உள்ளது என்று பொன்சேகா கூறினார்.