Tue. Sep 8th, 2026

கோத்தபாய தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவிடம்

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, 2005 ஆம் ஆண்டு அமெரிக்க பிரஜையாக இருந்தபோது ஹம்பாந்தோட்டை – மெதமுலன வாக்காளர் இடாப்பில் அவர் பெயர் இடம்பெற்றது தொடர்பாகவும் , குறித்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதன் ஊடாக சட்ட விரோத செயலொன்றினை புரிந்தமை மற்றும் தற்போது இலங்கை கடவுச் சீட்டொன்றினை பெற்றுக்கொண்டது தொடர்பாகவும் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸார் நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்ததுள்ளார்கள்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்களான சந்ர குப்த தேனுவர, காமினி வெயங்கொட ஆகியோர் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு முன்வைத்த எழுத்து மூல முறைப்படடுக்கு அமைவாக, குடிவரவு குடியகல்வு, குடியுரிமைச் சட்டம் மற்றும் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாக நேற்று நீதிவானுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி சிவில் சமூக செயற்பாட்டாளர்களான சந்ர குப்த தேனுவர, காமினி வெயங்கொட ஆகியோர் பொலிஸ் மா அதிபருக்கு இந்த விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளை கையளித்த நிலையில், அதனை விசாரிக்கும் பொறுப்பு முதலில் முகொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்டது.
எனினும் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பிக்க சிறிவர்தன, குறித்த விசாரணைகலின் முக்கியத்துவம் மற்றும் சிக்கல்கள் கருதி அவற்றை சி.ஐ.டி.க்கு வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் எடுத்துரைத்திருந்தார் . இதனையடுத்தே இதனை விசாரிக்கும் பொறுப்பு சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டது என்று குற்ற புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்கள்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed