கோத்தபாய – சுதந்திரக் கட்சி பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் தொடங்கியது
சுதந்திரக் கட்சி (SLFP ) மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி (UPFA ஆகியவற்றின் பிரதிநிதிகள் தற்போது பொதுஜன முன்னணியின் ஜனாதிபதிவேட்பாளர் கோட்டபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்
UPFAயின் பொதுச் செயலாளர் மஹிந்தா அமரவீரா, SLFPயின் பொதுச் செயலாளர் தயசிறி ஜெயசேகர மற்றும் லசந்தா அலகியவண்ணா ஆகியோர் சற்றுமுன்னர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்ததாக கூறப்படுகிறது.
வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக ஒரு கூட்டணியை உருவாக்குவது குறித்து இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் பொடதுஜன பெரமுன இடையே 7 வது சுற்று விவாதங்கள் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்றது குரறிப்பிடத்தக்கது . அதன் பின்னர் அன்றிரவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கொழும்பில் கலந்துரையாடினர் என்று செய்தி வெளியாகியது குறிப்பிடத்தக்கது