கோத்தபாய கூட்டணிகட்சிகளின் தலைவர்களை முதற்தடவையாக நேற்று சந்தித்தார்
பொது ஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கும் அதன் கூட்டணி கட்சி தலைவர்களுக்குமான முதலாவது சந்திப்பு இன்று எதிர்க்கடசி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இந்த கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கினார். இதன் பொழுது தேர்தல் வியூகங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. மேலும் கூட்டணியில் உள்வாங்கப்படக்கூடிய தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படத்தோடு, ஐக்கிய தேசிய கடைசியில் ஜனாதிபதி வேட்ப்பாளர்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன